தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் கல்லூரி எண் அறிந்திருந்தால் குழப்பம் இல்லை

இன்ஜினியரிங் கல்லூரி எண் அறிந்திருந்தால் குழப்பம் இல்லை

இன்ஜினியரிங் கல்லூரி எண் அறிந்திருந்தால் குழப்பம் இல்லை


UPDATED : ஜூன் 18, 2011 12:00 AM

ADDED : ஜூன் 18, 2011 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2011 12:00 AM ADDED : ஜூன் 18, 2011 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் கவுன்சிலிங்கிற்காக கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கோடு எண்களை மாணவர்கள் ஞாபகம் வைத்துக் கொண்டால், தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.


தமிழகத்தில் 455 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 427 கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானவை. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு என தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள் ஒரே பெயரில் அமைந்துள்ளன.


உதாரணமாக, ஆதிபராதி, அக்ஷயா, தனலட்சுமி, எக்செல், இந்துஸ்தான், ஞானமணி, இன்போன்ட ஜீசஸ், கற்பகம், மகாராஜா, கிங்ஸ், மீனாட்சி, மாதா, ஆக்ஸ்போர்டு, பனிமலர், பார்க், ஆர்.வி.எஸ்., ராஜலட்சுமி, பிரின்ஸ், பாவேந்தர் பாரதிதாசன், ஸ்காட், சாஸ்தா உள்ளிட்ட பெயர்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.


இவற்றில் மாணவர்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர விரும்பியிருப்பர். ஆனால், கவுன்சிலிங்கின்போது, அவசரத்தில் அதே பெயரில் வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்து விட வாய்ப்புள்ளது. அதே போல நல்ல வசதிகள் உள்ள கல்லூரிக்கு பதிலாக சுமாரான கல்லூரிகளையும் அவசரத்தில் தேர்வு செய்து விடும் வாய்ப்புள்ளது.


மேலும் எஸ்.ஆர்.கே., எஸ்.கே.பி., எஸ்.கே.ஆர்., எஸ்.எஸ்.எம்., போன்ற ஒரே மாதிரியான எழுத்துக்களைக் கொண்ட தனியார் பொறியியல் கல்லூரிகளும் தமிழகத்தில் நிறைய உள்ளன. கவுன்சிலிங்கின்போது, ஒரு எழுத்து மாற்றி கல்லூரியைத் தேர்வு செய்து விட்டாலும், மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரியில் சேர முடியாமல் போய்விடும்.


கவுன்சிலிங்கின்போது, கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து, சேர்க்கை ஆணையை பெற்றுவிட்டால், அதன்பிறகு கல்லூரியோ, பாடப்பிரிவோ மாற்றித்தரப்படாது. இதனால், மாணவர்கள் கவுன்சிலிங்கின்போது தாங்கள் விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறியியல் கவுன்சிலிங் கோடு எண்ணை ஞாபகம் வைத்துக் கொண்டால், கவுன்சிலிங்கின்போது இத்தகைய தவறுகளையும், பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us