தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2010ல் 1 லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர்

2010ல் 1 லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர்

2010ல் 1 லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர்


UPDATED : ஜூன் 18, 2011 12:00 AM

ADDED : ஜூன் 18, 2011 02:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2011 12:00 AM ADDED : ஜூன் 18, 2011 02:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2010ல் நடைபெற்ற பொறியியல் அகடமிக் கவுன்சிலிங்கில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 741 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.


2010ம் ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் 471 கல்லூரிகளில், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 883 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 24 புதிய தனியார் பொறியியல் கல்லூரிகள், கவுன்சிலிங்கில் இடம் பெற்றுள்ளன.


இதில் அகடமிக் பிரிவில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 445 இடங்களும், பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் 4,015 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் 3,778 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.


பொறியியல் அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான தர வரிசையில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 698வது இடத்தை பிடித்திருந்த சென்னை அரும்பாக்கம் மாணவர் சதீஷ்குமார் (72.50 கட்-ஆப்), அகடமிக் பிரிவில் கடைசி மாணவராக தனியார் கல்லூரியில் இ.சி.இ., பிரிவை தேர்வு செய்தார்.


தமிழ் வழி சிவில் படிப்பில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. ஏரோநாட்டிக்கல் பிரிவில் 1,959 பேர், ஆட்டோமொபைல் 704, பயோ-டெக்னாலஜி 1,121, சிவில் 9,342, கம்ப்யூட்டர் சயின்ஸ் 20 ஆயிரத்து 301, இ.சி.இ., 24 ஆயிரத்து 444, இ.இ.இ., 16 ஆயிரத்து ஏழு, இ., அண்டு ஐ., 2,069, ஐ.டி., 12 ஆயிரத்து 255, மெக்கானிக்கல் 16 ஆயிரத்து 907, சிவில்(தமிழ்) 660, மெக்கானிக்கல் (தமிழ்) 716, இதர பிரிவுகளில் 3,721 பேர் சேர்ந்துள்ளனர்.


பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களில், 66 ஆயிரத்து 671 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். 66 ஆயிரத்து 918 பேர் மாணவர்கள்; 43 ஆயிரத்து 299 பேர் மாணவியர்.


அகடமிக் கவுன்சிலிங்கின் முடிவில், அரசு ஒதுக்கீட்டில் 9,443 இடங்கள் காலியாக இருந்தன. 36 கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், 187 கல்லூரிகளில் 95 - 99 சதவீத இடங்கள், 110 கல்லூரிகளில் 90 - 94 சதவீத இடங்கள், 74 கல்லூரிகளில் 80 - 89 சதவீத இடங்கள், 64 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் நிரம்பின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us