UPDATED : ஜூன் 19, 2011 12:00 AM
ADDED : ஜூன் 19, 2011 12:18 PM
அ நிறம் | அளவு
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடப் புத்தகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், தேர்வுக்கு இடம்பெறும் வினா-விடை தொகுப்புகளுடன் கைடு விற்கப்படுகிறது. புத்தகங்களைக் காட்டிலும், மாணவர்கள் கைடுகளின் துணையுடன்தான் தற்போது தேர்வுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்காக பல நிறுவனத்தினர், முதுகலை ஆசிரியர்கள் துணையுடன், கைடுகளை தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். இதில் தமிழ் பாடத்திற்கான கைடுகள் மாணவர்களுக்கு அவசியமாகியுள்ளது. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள், இலக்கண, இலக்கியங்களுக்கும், பாடல்களுக்கும் விளக்கம் அளித்தும், வினா - விடைகளுடன் அமைந்துள்ளதால், மாணவர்கள், கைடுகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்
பாடத்திற்கு, தற்போது ஒரு நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள கைடு வித்தியாசமாக இருப்பதுடன், சினிமா பாடல், வசனங்கள், நகைச்சுவை துணுக்குகளும், நடிகர், நடிகையரின் படங்களுடன் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சினிமாவில் வரும் பல வசனங்கள், பாடல்கள் மாணவர்களையும், இளைஞர்களையும், தீயவழியில் அழைத்து செல்வதோடு, அவர்களின் படிப்புகளையும் பாதிப்பதாக, பெற்றோர் புலம்பி வருகின்றனர்.அந்த
கைடு பக்கங்களில் உள்ள சில வசனங்கள்: கலக்கிய வசனம் என்ற தலைப்பில், இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி - பாட்ஷா ரஜினி.அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி - பி.எஸ்.வீரப்பா.
இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில், இன்னிசை பாடி வரும்... - துள்ளாத மனமும் துள்ளும் விஜய்.
கேட்டேன் என்ற தலைப்பில், சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்... - அமர்க்களம் அஜித். இதில், அஜித் புகைப்படமும் உள்ளது.
இது
மட்டுமின்றி, நகைச்சுவை துணுக்குகளும் இடம் பெற்றுள்ளன. கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் பேசி கொள்ளும் விதத்தில் அவை இடம் பெற்றுள்ளன. தமிழ் பாடத்தில், ஆய்வாளர், காவலர் என்று கூட அவர்கள் அதில் குறிப்பிடவில்லை.இது
போன்ற ஏராளமான சினிமா வசனங்கள் பஞ்ச் டயலாக்குகள், எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகரின் படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.முதல்
பக்கத்தில் கைடு நிறுவனத்தினர் அளித்துள்ள விளக்கம்: பாடத்திட்டத்திற்கு சற்று அப்பாற்பட்டு சென்று, தாலாட்டு, தெம்மாங்கு, ஹைக்கூ, திரைப்படப் பாடல், நகைச்சுவை துணுக்கு, கைப்பேசி சரவெடிகள், இலக்கிய ஆய்வுகள் என, அழகிய தமிழை உங்களுக்கு பல்வேறு கோணங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். காரணம், பொதுத்தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பதுடன், ஐ.ஏ.எஸ். போன்ற உங்கள் எதிர்கால போட்டி தேர்வுக்கு, அடிப்படை தமிழ் துணைவனாக இருக்கும். இப்படி அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எங்கே செல்கிறது நம் கல்வி?