ஆராய்ச்சி கட்டுரைகளை மின்னணு வசதி மூலமாக இனி பெறலாம்!
ஆராய்ச்சி கட்டுரைகளை மின்னணு வசதி மூலமாக இனி பெறலாம்!
UPDATED : ஜூன் 19, 2011 12:00 AM
ADDED : ஜூன் 19, 2011 12:25 PM
அ நிறம் | அளவு
சிவகாசி
முதுகலை
பட்ட மேற்படிப்பு, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆய்விற்கு தேவையான ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு புத்தங்களில் இருந்து திரட்டுகின்றனர். இதில் முக்கிய புத்தங்கள் ஒரு சில நூலகங்களில் மட்டுமே கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஆராய்ச்சி புத்தகங்கள் கிடைக்காமல் சிலர் சிரமப்படுகிறார்கள். அப்படியே கிடைத்தாலும் இந்த புத்தகத்தை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது.இதை
தொடர்ந்து, மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், பல்கலைக்கழக மானிய குழு, ஐ.ஐ.டி., ஏ.ஐ.சி.டி.இ., இணைந்து என். லிஸ்ட் என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில் 2500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வசதியை பல்கலை மானியம் பெறும் கல்லூரி மாணவர்கள் பெறும் வகையில், மின்னணு தகவல்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.இங்குள்ள
முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக யூசர்நேம், பாஸ்வேர்டு வழங்கப்படும். இணையதள வசதியை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக ஆராய்ச்சி கட்டுரைகளை பெறலாம். இத்திட்டத்தில் இதுவரை இந்தியா முழுவதும் 1500 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.விருதுநகர்
மாவட்டம் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியிலும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக கூட்டம் முதல்வர் பாஸ்கரன் தலைமையில், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அய்யன்கோடீஸ்வரன் முன்னிலையில் நடந்தது. பேராசிரியர் பிரபு வரவேற்றார். அகமதாபாத் தகவல் மற்றும் நூலக ஒருங்கிணைப்பு மைய விஞ்ஞானி அசோக்குமார் துவக்கி வைத்தார். இதில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி முதல்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். நூலகர் காசிராஜன் நன்றி கூறினார்.