தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டணத்தை திரும்ப வழங்கியது போலி கல்லூரி...

கட்டணத்தை திரும்ப வழங்கியது போலி கல்லூரி...

கட்டணத்தை திரும்ப வழங்கியது போலி கல்லூரி...


UPDATED : ஜூன் 19, 2011 12:00 AM

ADDED : ஜூன் 19, 2011 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2011 12:00 AM ADDED : ஜூன் 19, 2011 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை: மதுரையில் போலி அனிமேஷன் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது.


மதுரை கே.கே.நகரில் ஓ.சி.இ., அனிமேஷன் கல்லூரி செயல்பட்டு வந்தது. &'இக்னோ&' பல்கலை, சிதம்பரம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகளில் இணைவிப்பு பெற்று, &'விஷூவல் கம்யூனிகேஷன்&', &'மல்டிமீடியா&'வில் பட்டயம், பட்டப் படிப்புகளை வழங்குவதாக கூறி மாணவர் சேர்க்கை நடத்தியது. இதுதவிர பல மாவட்டங்களில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்குவதாகக் கூறியும் மாணவர் சேர்க்கை நடத்தியது. இதற்காக ஆண்டுக்கு மாணவர் ஒருவருக்கு ரூ. 77 ஆயிரம் வரை வசூலித்தது. ஆனால் இங்கு படித்த மாணவர்களுக்கும், பயிற்சி மைய நிர்வாகிகளுக்கும் எந்தவித &'மெட்டீரியல்&' உட்பட எதையும் அங்கீகாரம் பெற்று வழங்காததால் மாணவர்களும், பயிற்சி மைய நிர்வாகிகளும் கல்லூரியை முற்றுகையிட்டனர்.


மதுரை கலெக்டர் சகாயத்திடம் முறையிட்டனர். இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை விசாரணை நடத்தினார். இதில், கல்லூரி முறையான இணைவிப்பு பெற்று நடத்தாதது தெரியவந்தது. இதையடுத்து மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாதென அந்தக் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரி, முறையிட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி கட்டணத்தை திருப்பி வழங்க முன்வந்தது. ஒரு செமஸ்டர் நடந்துள்ள நிலையில், அதற்கான கட்டணத்தை கழித்துக் கொண்டு தருவதாக தெரிவித்தது. ஆனால் அங்கீகாரம் பெறாத சான்றிதழ் தங்களுக்குத் தேவையில்லை என மாணவர்கள் உறுதியாக தெரிவித்து, முழுத் தொகையையும் தரவேண்டும் என வலியுறுத்தினர்.


இதனடிப்படையில் புகார் கொடுத்த மாணவர்களிடம், கல்வி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் முழுமையாக ஜூன் 18 அன்று திருப்பி வழங்கியது. 23க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொகையை ரொக்கமாக பெற்றுச் சென்றனர். தினமலர் நாளிதழ், வெப்சைட் செய்திகளை படித்த மேலும் சில மாணவர்களும் அதேதினத்தில் பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தவிர பயிற்சி மைய நிர்வாகிகளும் தங்களிடம் பெற்ற ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என முறையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் போலீஸ் கமிஷனர் அலுவலக நடவடிக்கை மூலம் தீர்வு காண ஏற்பாடு செய்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us