தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க விண்ணப்பம் வரவேற்பு

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க விண்ணப்பம் வரவேற்பு

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM

ADDED : ஜூன் 20, 2011 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM ADDED : ஜூன் 20, 2011 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள அரசு சாரா புதிய தொண்டு நிறுவனம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப படிவம்,  அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் விநியோகிக்கப்படும் என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், 2011-2012ம் கல்வியாண்டில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள அரசுசாரா புதிய தொண்டு நிறுவனம் விண்ணப்பம் செய்யலாம். அத்தகைய தொண்டு நிறுவனம், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்விப் பணியில், குறைந்தது மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


அவை, தேசிய டிரஸ்ட் சட்டம் மற்றும் சங்கங்களுக்கான பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த மூன்றாண்டில், அத்தொண்டு நிறுவனம் வரவு செலவு கணக்கு தணிக்கை விபரம் வைத்திருத்தல் வேண்டும். இதுவரை எவ்வித புகார்களும் இடமளிக்காமல் பணிபுரிந்த தொண்டு நிறுவனமாக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் தொண்டு நிறுவனம், மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) மாவட்ட திட்ட அலுவலகம், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மோகனூர் சாலை, நாமக்கல் என்ற முகவரியில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பம், வரும் 20ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், இம்மாதம் 27ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us