தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்


UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM

ADDED : ஜூன் 20, 2011 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM ADDED : ஜூன் 20, 2011 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீதிபதி ரவிராஜபாண்டியனால் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக் கட்டண பட்டியலை வேலூர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி, 142 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும், 133 மெட்ரிக் பள்ளிகளுக்கும் வேலூர் ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புண்ணியகோட்டி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார்.


இதுதொடர்பாக வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,  மாவட்டத்தில் சில பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள 275 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்த கல்வி கட்டணம் 2010-11, 2011-12, 2012-13 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கு பொருந்தும்.


இந்த 275 பள்ளிகளும் தங்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியுமாறு பள்ளி கல்வி கட்டணம் குறித்த அறிவிப்பை வைக்க வேண்டும்.


அரசு உத்தரவிட்டுள்ள கல்வி கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. பள்ளிகளில் கூடுதல் வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


வேலூர் மாவட்டத்தில் உள்ள 142 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும், 133 மெட்ரிக் பள்ளிகளுக்கும் உரிய கல்வி கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us