UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 10:44 AM
பொறியில் படிப்பில் சேருவதற்கு முதலில் கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். இந்த கலந்தாய்வு தான் மாணவர்களின் பொறியியல் கனவை நனவாக்கும் முதல்படியாகும்.
எனவே மாணவர்கள் எந்த பதற்றமும் இன்றி, தெளிவாக பொறியியல் கலந்தாய்வை எதிர்கொள்ளும் வகையில் கல்விமலர்.காம் அனைத்து தகவல்களையும் இந்த சிறப்புப் பக்கததில் வழங்கியுள்ளது. இந்த சிறப்பு பக்கம் கல்விமலர்.காமில் இணைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு குறித்த செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படும். மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தவை கட்டுரைகளாகவும், மாணவர்களுக்கான அறிவுரை, பெற்றோருக்கான அறிவுரை என்ற பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக மாணவர்களுக்கு எழும் சந்தேகங்கள், கேள்வி பதில்களாக சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியத் தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு தகவல் பலகையில் ஓடிக்கொண்டே இருக்கும்.
பொறியியல் கல்லூரி, பொறியியல் பாடப் பிரிவுகள், புதிய கல்லூரிகள் என கலந்தாய்வுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளது கல்விமலர்.காம்.
பார்த்து, படித்து பயன்பெறுங்கள்.. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று விரும்பிய பாடத்தை விரும்பிய கல்லூரியில் தேர்ந்தெடுங்கள். வாழ்த்துகள்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2011 - http://kalvimalar.dinamalar.com/tamil/index-eng.asp