தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலை பேராசிரியர் நியமனம் நிறுத்தி வைக்க உத்தரவு

பாரதியார் பல்கலை பேராசிரியர் நியமனம் நிறுத்தி வைக்க உத்தரவு

பாரதியார் பல்கலை பேராசிரியர் நியமனம் நிறுத்தி வைக்க உத்தரவு


UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM

ADDED : ஜூன் 24, 2011 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM ADDED : ஜூன் 24, 2011 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரதியார் பல்கலையில், 34 பேராசிரியர்களை புதிதாக நியமிக்கும் முடிவை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


பாரதியார் பல்கலையின் பல்வேறு துறைகளில் நியமிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன், 34 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


இவர்களின் நியமனத்தில், அரசு விதிமுறைப்படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை; துணைவேந்தரின் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என, பல்கலையின் எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


விசாரணைக்குப் பின் வழக்கை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டனர். இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர்களின் நியமனத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, உயர்கல்வித் துறை செயலர் கண்ணன், பல்கலைக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us