2013ம் ஆண்டில் பொது நுழைவுத் தேர்வு: மத்திய செயலர் தகவல்
2013ம் ஆண்டில் பொது நுழைவுத் தேர்வு: மத்திய செயலர் தகவல்
UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 10:24 AM
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தேசிய மருத்துவ உபகரண தயாரிப்பு மையத்தை துவக்கி வைத்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும் பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
பொது நுழைவுத் தேர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 90 சதவீதத்தினர், பொது நுழைவுத் தேர்வு வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்த அறிக்கை செப்டம்பரில் அரசிடம் அளிக்கப்படும். மேலும், இது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்படும். மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு, 2013ம் ஆண்டில் பொது நுழைவுத் தேர்வு அறிமுகபடுத்தப்படும். இவ்வாறு ராமசாமி கூறினார்.
தமிழகத்தில் உள்ள பொறியியல், மருத்துவ கல்லூரிகளுக்கு தற்போது நுழைவுத் தேர்வு முறை அமலில் இல்லை. பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
