தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெட்ரோலியம் இன்ஜினியரிங்

பெட்ரோலியம் இன்ஜினியரிங்

பெட்ரோலியம் இன்ஜினியரிங்


UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM

ADDED : ஜூன் 28, 2011 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM ADDED : ஜூன் 28, 2011 05:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கச்சா எண்ணெயாகவோ அல்லது இயற்கை எரிவாயுவாகவோ உள்ள ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளோடு தொடர்புடையது பெட்ரோலியம் இன்ஜினியரிங். ஹைட்ரோகார்பன்களை கண்டுபிடித்தல் மற்றும் உற்பத்தி செய்வது அப்ஸ்ட்ரீம் நடவடிக்கை எனப்படும். அவற்றை சுத்திகரித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை டெளன்ஸ்ட்ரீம் நடவடிக்கை ஆகும்.


இத்துறைக்கு

, ஜியோபிசிக்ஸ், பெட்ரோலியம் ஜியாலஜி, பார்மேஷன் எவலியூஷன், டிரில்லிங், எகனாமிக்ஸ், ரிசர்வாயர் சிமுலேஷன், வெல் இன்ஜினீயரிங், ஆர்டிபீசியல் லிப்ட் சிஸ்டம் மற்றும் ஆயில் அன்ட் கேஸ் பெசிலிடீஸ் இன்ஜினியரிங் போன்ற பல துறைகளின் திறன்களும் தேவைப்படுகின்றன.


எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சியடையும்போது

, இத்துறையில் பணிக்குறைப்புகள் நிகழ்ந்தாலும், அதிகளவு சம்பளம் கிடைக்கும் துறைகளில் ஒன்றாக இத்துறை விளங்குகிறது. பெட்ரோலியத் துறை ஒரு தொழில்நுட்பத் துறையாக விளங்குகிறது. கம்ப்யூட்டர் மாடலிங், புள்ளியியல் பயன்பாடு மற்றும் உபகரணங்கள், சாத்திய பகுப்பாய்வு மற்றும் ஹொரைசான்டல் டிரில்லிங் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பெட்ரோலிய பணியில் அதிக மேம்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.


ஆழ்கடல்

, பாலைவனம் மற்றும் ஆர்க்டிக் போன்ற பகுதிகள், பெட்ரோலிய பொறியாளர்கள் பொதுவாக பணிபுரியும் பகுதிகள். அவர்கள் பல நவீன முறைகளின்மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். SPE எனப்படும் பெட்ரோலிய பொறியாளர்களின் சமூகம், பெட்ரோலிய பொறியாளர்களுக்கான ஒரு பெரிய தொழில்துறை அமைப்பாகும். பெட்ரோலியத் தொழில் பற்றிய பல தகவல்களை இந்த அமைப்பு வெளியிடுகிறது.


பெட்ரோலியப் பொறியாளர்கள் கீழ்கண்ட முறைகளில் வகைப்படுத்தப்படுகிறார்கள்

...


ரிசர்வாயர் இன்ஜினியர்

, டிரில்லிங் இன்ஜினியர், ப்ரொடக்ஷன் இன்ஜினியர், சப்-சர்பேஸ்(நிலத்தடி) இன்ஜினியர், மட்(ஈர மணல் அல்லது சேறு) இன்ஜினியர்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us