தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு இலவச மருத்துவக்காப்பீடு

மாணவர்களுக்கு இலவச மருத்துவக்காப்பீடு

மாணவர்களுக்கு இலவச மருத்துவக்காப்பீடு


UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM

ADDED : ஜூன் 29, 2011 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM ADDED : ஜூன் 29, 2011 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு பல்கலைக்கழகம், அங்கு படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் 2011-2012 கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படவுள்ளது. இதனால் அப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் 3,500 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் படி, காப்பீடு பிரீமியம் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை.


பிரீமியம் தொகையை மாணவர்கள் சார்பில் அப்பல்கலைக்கழகமே செலுத்தி விடும். இதற்காக நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமும், பெங்களூரு பல்கலைக்கழகமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன. ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு 582 ரூபாய் ரீமியம் தொகையாக செலுத்தப்படும். 50 ஆயிரம் ரூபாய் வரை மாணவர்கள் பயனடைந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் படி, துரதிஷ்டவசமாக மாணவரின் பெற்றோர் இறந்தால் அம்மாணவர் கல்வியை தொடரும் வகையில் 1 லட்ச ரூபாய் வழங்கப்படும்.


சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மருத்துவக்காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதே மாதிரியான திட்டம் தமிழக பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தினால் பின்தங்கிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us