UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM
ADDED : ஜூன் 29, 2011 05:27 PM
அ நிறம் | அளவு
அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் 464 தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்த இடங்களுக்கு, ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 109 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 30ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கவுன்சிலிங் துவங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளன்று விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
இதையொட்டி, இந்த பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள், ஜூன் 28ம் தேதி சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்ட் 11ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கின்றது.
