விளையாட்டு வீரர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவு
விளையாட்டு வீரர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவு
UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM
ADDED : ஜூன் 30, 2011 05:40 PM
சிறப்பு ஒதுக்கீடு முறையில் இன்றைய தினம் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்பு ஒதுக்கீட்டில் வரும் விளையாட்டுப் பிரிவினர் 3,457 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற்றது. இவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை, விரும்பிய கல்லூரிகளில் கேட்டுப் பெற்றனர். இன்றுடன் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது.
காலை முதலே மாணாக்கர்களும், பெற்றோரும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரத் துவங்கிவிட்டனர். அதிக பரபரப்புடன் பெற்றோரும், மாணவர்களும் அண்ணா பல்கலையில் கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தில் காணப்பட்டனர்.
சரியாக காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்குவதால் 8 மணிக்கே பெரும்பாலான மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.
இன்றைய தின முடிவில் எந்தெந்த கல்லூரிகளில் எத்தனை இடங்கள் நிரம்பின என்ற விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் அறிவிக்கும்.
