தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கவுன்சிலிங் : புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ கவுன்சிலிங் : புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ கவுன்சிலிங் : புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு


UPDATED : ஜூலை 01, 2011 12:00 AM

ADDED : ஜூலை 01, 2011 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2011 12:00 AM ADDED : ஜூலை 01, 2011 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்திருந்தனர்.


இவர்களில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 659 பேர் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டது. இத்தகவலை, பள்ளிக்கல்வி தேர்வுத் துறை, அண்ணா பல்கலை மற்றும் மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு தெரிவித்தது.


இதையடுத்து, கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ்., தரவரிசைப் பட்டியலில் திருத்தம் செய்து, புதிய தரவரிசைப் பட்டியலை, www.tnhealth.org இணையதளத்தில், மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று மாலை வெளியிட்டது.


"இந்த தரவரிசைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, அழைப்பு கடிதம் இல்லாத மாணவர்களும் கவுன்சிலிங்கில் அவசியம் பங்கேற்க வேண்டும்" என, கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குனர் ஷீலா கூறினார்.


பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவின்படி, பொறியியல் தரவரிசை பட்டியலிலும் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us