UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM
ADDED : ஜூலை 02, 2011 10:24 AM
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப்-1, வங்கித் தேர்வு மற்றும் தனியார் துறையில் உயர் நிர்வாகப் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவ மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ., (அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்டடீஸ்) முதுநிலை படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் நலத் துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டில் துவங்கும் இப்படிப்பில் சேர விரும்புவோர் பல்கலை மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து 10+2+3 அல்லது 10+2+4 முறையிலான ஏதாவது ஒரு இளைநிலை படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதற்கான விண்ணப்ப படிவத்தை பல்கலையில் இருந்து ஜூலை 15ம் தேதி வரை பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 21ல் நுழைவுத் தேர்வு, ஜூலை 26ல் குழுவிவாதம், நேர்முகத் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வகுப்புகள் துவங்கும், என பதிவாளர் பொறுப்பு ராஜ்யக்கொடி தெரிவித்துள்ளார்.
