சென்னை, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடம் கிடையாது
சென்னை, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடம் கிடையாது
UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM
ADDED : ஜூலை 02, 2011 11:59 AM
இவ்விரு கல்லூரிகளிலும் இந்த ஆண்டு கூடுதலாக 100 இடங்கள் கிடைக்கும் என்று மாணவர்கள் இடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பில்லை என்றும், அடுத்த ஆண்டு நிச்சயமாக கிடைத்துவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய், தமிழகத்தில் உள்ள 17 அரசு கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இங்கள் உள்ளன். இதில் சிறப்புப் பிரிவினருக்கான 49 இடங்கள் போக மீதமுள்ள 1,604 இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், 9 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 650 மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைத்துள்ளது. திருச்சியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் கூடுதலாக 115 மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இந்த ஆண்டு, சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 100 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நிச்சயமாக அடுத்த ஆண்டு கிடைத்துவிடும். 2வது கட்ட மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.
