UPDATED : ஜூலை 03, 2011 12:00 AM
ADDED : ஜூலை 03, 2011 01:53 PM
அ நிறம் | அளவு
சென்னை: எம்.பி.பி.எஸ்., &'கட்-ஆப்&' கணிசமான அளவு உயர்ந்துள்ளதால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
அரசு
மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, ஜூலை இரண்டாம் வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும் என தெரிகிறது.தமிழகத்தில்
, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம் 1,945 எம்.பி.பி.எஸ்., சீட்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 292 இடங்கள் (15 சதவீதம்) வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 1,653 இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயக்கும் 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு நடத்தும் பொது கவுன்சிலிங் மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன.இந்த
ஆண்டிற்கான முதல்கட்ட கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், கடந்த 30ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதற்கு, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவினரையும் சேர்த்து, மொத்தம் 1,803 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.பொதுப்
பிரிவினருக்கான கவுன்சிலிங், ஜூலை 2 ம் தேதியுடன் முடிந்த நிலையில், பி.சி., - எம்..பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு, 34 பேர், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய பாடங்களிலும், 32 பேர், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.இதன்
காரணமாக, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு &'கட்- ஆப்&' மதிப்பெண் கணிசமாக உயர்ந்துள்ளது. மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியலின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இந்த ஆண்டின் உத்தேச, &'கட்-ஆப்&' மதிப்பெண் விவரம்:பிரிவு
&'கட்-ஆப்&' மதிப்பெண் கடந்த ஆண்டு, &'கட்-ஆப்&'ஓ
.சி., 198.75 197.50பி.சி., 197.75 195.50
பி.சி.எம்., 196.25 194.00
எம்.பி.சி., 196.25 193.25
எஸ்.சி., 191.75 188.50
எஸ்.சி.ஏ., 188.00 184.75
எஸ்.டி., 185.25 179.50
பி
.டி.எஸ்., கவுன்சிலிங்: தற்போது நடந்துவரும் முதல்கட்ட கவுன்சிலிங்கின் தொடர்ச்சியாக, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங், ஜூலை இரண்டாவது வாரம் நடைபெறும் என தெரிகிறது.