UPDATED : ஜூலை 05, 2011 12:00 AM
ADDED : ஜூலை 05, 2011 11:08 AM
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்று வருகிறது. ஜுன் 30ம் தேதி தொடங்கி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில், பி.சி. பிரிவில் 797 மாணவர்களும், பிசிஎம் பிரிவில் 85 மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர். அரசு கல்லூரிகளில் ஓசி, பிசி, பிசிஎம் ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தற்போது எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஆகிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே உள்ளன. அரசு, அரசின் நிதியுதவியுடன் செயல்படும் மருத்துவக் கல்லூரியில் 618 மருத்துவ இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 629 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 79 இடங்களும் காலியாக உள்ளன. அவற்றிற்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
