தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்து மனு

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்து மனு

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்து மனு


UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM

ADDED : ஜூலை 07, 2011 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM ADDED : ஜூலை 07, 2011 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்

.டி. மனோன்மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


மனுவில்

, நிபுணர் குழுவில் கல்வியாளர் என்ற பெயரில் சென்னை, டி..வி. பள்ளியைச் சேர்ந்த 82 வயது நிரம்பிய ஜெயதேவ் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆடடோமொபைல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர் எந்த பள்ளியிலும் ஆசிரியராகவோ, முதல்வராகவோ பணியாற்றவில்லை. அதில்லாமல், இவருக்கு தமிழில் எழுதவோ, படிக்கவோத் தெரியாது.


அதேப்போல

, திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி சி.பி.எஸ்.சி. பள்ளிகளை நடத்தி வருபவர். சமச்சீர் கல்விக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்.


இத்தகைய நபர்களைக் கொண்டு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது

. இத்தகைய நபர்களைக் கொண்ட நிபுணர் குழு அளித்த அறிக்கை செல்லத்தக்கது அல்ல.


சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காகவே நிபுணர் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

. மாறாக இந்த குழு, சமச்சீர் கல்வியை குழிதோண்டி புதைப்பதற்காகவே திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.


அதேப்போல

, நிபுணர் குழுவில் இடம்பெற்ற என்.சி..ஆர்.டி. பிரதிநிதிகளின் கருத்து என்ன என்பதோ, ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்து எதுவுமோ அறிக்கையில் இல்லை.


இதுபோன்ற நிபுணர் குழு அளித்த அறிக்கை செல்லத்தக்கது அல்ல என்று மனுவில் கூறப்பட்டுள்ளது

.


இந்த நிலையில்

, சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us