UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM
ADDED : ஜூலை 09, 2011 10:32 AM
சைனீஸ் மொழிப் பாடத்தை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் என இரண்டு வழிகளிலும் இப்பாடம் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக சைனீஸ் மொழிப் பாடம் இக்னோவில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுவும் இக்னோவின் செயற்கைகோள் வழியாக ஆன்லைன் பாடம் நடத்தப்படும் என்று இக்னோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இதற்கு நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை கொண்டதாக இப்படிப்பு இருக்கும். ஆன்லைனில் அனைவருக்கும் சேர்க்கை கிடைக்கும். நேரடி வகுப்புகளில் 30 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜுலை 18ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
