UPDATED : ஜூலை 09, 2011 12:00 AM
ADDED : ஜூலை 09, 2011 11:38 AM
பி.எச்.டி., எம்.பில்., மற்றும் முதுகலை, இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள், சென்னை அல்லது மதுரையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன; ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். வரும் நாட்களில் சென்னை, மதுரைக்கு செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் ரெனிவல் செய்துவிடலாம்.
கோவை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ஞானசேகரன் கூறியதாவது: இன்ஜினியரிங், முதுகலை, எம்.பில்., பி.எச்.டி., முடித்தவர்கள், சென்னை அல்லது மதுரைக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் இருந்து, ஆன்லைன் மூலம் எல்லா பட்ட படிப்புகளையும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான உத்தரவை அரசு அளித்துள்ளது. முதன் முதலாக பதிவு செய்வோர் மட்டும் (ஆன்லைனில்), வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். பட்டபடிப்புக்கான தேர்ச்சி சான்றிதழ், ரேஷன்கார்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, டி.சி., ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என்றார்.
