UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM
ADDED : ஜூலை 10, 2011 11:25 AM
அ நிறம் | அளவு
கோவை: மரத்தூளுக்கு பதிலாக, வீணாகும் தாவரக் கழிவுகளை பயன்படுத்தி, செயற்கை விறகுகளான எரிகட்டிகள் தயாரிக்கும் தொழில்நுட்பம், கோவை, வேளாண் பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்
மூலம் பசுமையைக் காப்பதுடன், விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் உட்பட பலரும், வேலை வாய்ப்பு பெறக்கூடிய வாய்ப்புள்ளது. தற்போது வணிகரீதியாக நடைமுறையில் உள்ள, &'பிரக்கெட்ஸ்&' என்ற எரிக்கட்டிகள் (செயற்கை விறகுகள்) மரத்தூளை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மரத்தூளின் விலை உயர்வால், தயாரிப்புச் செலவை சமாளிக்க முடியாமல், எரிகட்டிகளின் விலையும் அதிகரிக்கிறது.அதேவேளையில், எரிபொருள் தேவைக்காக மரங்கள் வெட்டப்படுவதால், பசுமை பாதிக்கப்படுகிறது. புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. இதுபோன்ற சூழலில் வேளாண் கழிவுப் பொருட்களில் இருந்து எரிகட்டிகளை தயாரிக்கும் தொழில்நுட்பம், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவரை, கத்தரி, பருத்தி மற்றும் மிளகாய் மார்கள் (அறுவடைக்கு பின் வீணாகக்கூடிய, அழிக்கப்படும் செடிகள், &'மார்&' எனப்படுகின்றன) நெல் உமி, கடலை தோலி, கரும்புச் சக்கை, தேங்காய் மட்டை போன்றவற்றை பவுடராக மாற்றி, எரிகட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
வேளாண்
பல்கலை உயிர் ஆற்றல் துறை தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது: நிலக்கரிக்கு அடுத்து இந்த, &'பிரக்கெட்ஸ்&' என்ற செயற்கை விறகுகள், அதிக வெப்பத்திறன் கொண்டுள்ளன. மரத்தூளின் விலை அதிகரித்து வருவதால், எரிகட்டிகளை தயாரிக்க மாற்று வழி தேட வேண்டும். பெட்ரோலியப் பொருட்களும் குறிப்பிட்ட அளவு மட்டுமே தற்போது இருப்பு உள்ளன. எனவே, கட்டாயமாக மாற்றுப் பொருளை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அறுவடைக்கு பின் ஏராளமான செடிகள் வீணாகின்றன. அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற வேண்டும். எனவே, மரத்தூளுக்கு பதிலாக ஈரப்பதம் அதிகமில்லாத, சாம்பல் சத்துள்ள குறிப்பிட்ட செடிகளை பயன்படுத்தி, எரிகட்டி தயாரிக்க கடந்த மூன்றாண்டுகளாக ஆராய்ச்சி நடந்தது.தற்போது
ஆராய்ச்சி முடிவடைந்த நிலையில், வேளாண் கழிவுப் பொருட்கள் எரிகட்டியாக மாற்றப்படுகின்றன. இவை ஒரே சீராக இருப்பதால், சாதாரண விறகுகளை விட, எரிதிறன் பல மடங்கு அதிகமாக உள்ளது. தேயிலை நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை பயன்படுத்தும் இன்ஜினியரிங் நிறுவனங்கள், மர விறகுகளுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். இதன் விலையும் குறைவு. மர விறகுகள் பற்றாக்குறை, நிலக்கரியால் சுற்றுச்சூழல் மாசடைதல் போன்ற காரணங்களால் எரிகட்டிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நெதர்லாந்து, பிரான்ஸ், சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இதற்கு மவுசு அதிகம்.எனவே
, ஏற்றுமதி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. குறைந்தபட்சமாக 6 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய்க்குள் இதற்கான தயாரிப்புக் களத்தை அமைக்கலாம். ஒரு மணி நேரத்தில் 500 கிலோ எரிகட்டிகள் வரை தயாரிக்கலாம். கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை விலை கிடைக்கிறது.பல இடங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டும், குழியில் கொட்டியும் அகற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக எரிக்கட்டிகளாக மாற்றினால் பலன் கிடைக்கும். வேலையில்லா பட்டதாரிகள் கிராமப்பகுதிகளில் எரிகட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளை அமைத்து, சுயதொழில் செய்யலாம். விவசாயிகளுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். அந்தந்த சீசனுக்கேற்ப செடிகளை பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலும் மாசடையாது. இயற்கை மரங்களின் தேவை குறைவதால் பசுமைக்கு பாதிப்பிருக்காது. எனவே, தொழில்நுட்பம் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெங்கடாசலம் தெரிவித்தார்.எரிகட்டி
தயாரிக்கும் தொழில்நுட்ப முறை: எரிகட்டிகளை தயாரிப்பதில் இரண்டு வகை தொழில்நுட்பங்கள் இருப்பினும், இந்தியாவில் உந்து தண்டு தொழில்நுட்பமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதேமுறையில் தான், கோவை வேளாண் பல்கலையிலும் விவசாய கழிவுகளை பயன்படுத்தி, எரிகட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்தபட்சமாக, 10 சதவீத ஈரப்பசை மட்டுமே செடிக் கழிவுகளில் இருக்க வேண்டும். முதல் நிலையில் சேகரிக்கப்படும் செடிகளின் கழிவுகளில் உள்ள ஈரப்பசை, சோலார் கூடார உலர்த்தி மூலமாக நீக்கப்படுகிறது. இதற்கு ஒரு நாளாகும். பின், இயந்திரம் மூலம் &'பவுடர்&' ஆக மாற்றப்படுகிறது.இந்த
துகள்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் உந்து தண்டு மூலமாக அதிக விசையுடன் அழுத்தப்படும்போது, கட்டிகளாக மாறி வெளியேறுகின்றன. உந்து தண்டு இயந்திரத்தில் இருந்து வெளியேறும் ஒரு சில வினாடிகளிலேயே, எரிகட்டிகள் கெட்டித்தன்மையை அடைகின்றன. இவை குறைந்தபட்சமாக 30 மி.மீ., முதல் 90 மி.மீ., வரை அகலம் கொண்டவை. காய்ந்த செடிகளை முழுமையாக பவுடராக மாற்றி, கட்டிகளாக மாற்றப்படுவதால் எடையும் மாறுவதில்லை. செடிக் கழிவுகளின் எடை அளவுக்கேற்ப கட்டிகளின் எடையும் இருக்கும்.