UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM
ADDED : ஜூலை 12, 2011 10:29 AM
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் பொதுப் பிரிவினர் 21 பேருக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களில், 50 சதவீத இடங்களை ஓ.சி. பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என, கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நேற்று முன்தினம் நடந்து முடிந்த எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங்கில், ஓ.சி., பிரிவுக்கு 35 சதவீத இடங்கள் தான் ஒதுக்கப்பட்டன. தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மீதமுள்ள 15 சதவீத இடங்களுக்கான கவுன்சிலிங்கை மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தியது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு அலுவலகத்தில், காலை 10 மணிக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில் பங்கேற்க, 27 பேர் அழைக்கப்பட்டனர். 27 பேரில் 21 பேர் பங்கேற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக் கடிதம் பெற்றனர்
