UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM
ADDED : ஜூலை 12, 2011 11:44 AM
ராஜஸ்தான் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் டிபார்ட்மெண்ட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்டு கம்யூனிகேஷன் (டி.ஐ.டி.சி.,) நிறுவனத்தில் 418 இன்பர்மேடிக்ஸ் அசிஸ்டென்ட்டுகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது: டி.ஐ.டி.சி.,யில் இன்பர் மேடிக்ஸ் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2012 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பாலிடெக்னிக் படிப்பு முடித்த பின்னர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ முடித்தவர்களும், மூன்று வருட பாலிடெக்னிக் படிப்பில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பைப் படித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதன் பின்னர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸில் டிப்ளமோ முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். முழுமையான விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை:
டி.ஐ.டி.சி.,யின் இன்பர்மேடிக்ஸ் அஸிஸ்டெண்ட் பதவிக்கு எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
டி.ஐ.டி.சி.,யின் இன்பர்மேடிக்ஸ் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.350/ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.150/ மட்டும் செலுத்தினால் போதுமானது. இதன் பின்னர் ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் பதிவு முடியும் நாள் : 19.07.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 21.08.2011
இணையதள முகவரி : http://oasis.rkcl.in/doitc/CMS/Content_Static.aspx?did=41
