UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM
ADDED : ஜூலை 12, 2011 03:31 PM
நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் மூலம், யு.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வை ஆங்கிலத்தில் எழுதியவர்கள் கூட, இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதில் நேர்முகத் தேர்வை செய்யலாம் என்று மும்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தெளிவாக்கியுள்ளது.
முன்னர் இருந்த யு.பி.எஸ்.இ. விதிமுறையின்படி, ஆங்கிலத்தில் தேர்வெழுதிய மாணவர்கள், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொள்ள வேண்டும் என்ற விதியை எதிர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ். மாணவர் சித்ரஞ்சன் குமார் தொடர்ந்த வழக்கு அமைந்திருந்தது.
ஏனெனில் இவர், ஆங்கிலத்தில் எழுத்துத் தேர்வை எழுதினார். ஹிந்தியில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள விரும்பினார். ஆனால் அதற்கு ஒப்புதல் கிட்டவில்லை. அதனைத் தொடர்ந்தே மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நிபுணர் குழுவின் பரிந்துரையை யு.பி.எஸ்.சி. ஏற்றுக் கொண்டு அரசுக்கும் அனுப்பியுள்ளது. அரசிடம் இருந்து பதில் தாக்கல் செய்யப்பட்டதும், யு.பி.எஸ்.இ. இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தற்போதுள்ள விதிமுறையின்படி, இந்திய மொழிகளில் தேர்வெழுதியவர்கள், ஆங்கிலம் அல்லது ஹிந்தி என ஏதேனும் ஒரு மொழியில் மட்டுமே நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
