தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு இம்மாத இறுதியில் வெளியீடு

பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு இம்மாத இறுதியில் வெளியீடு

பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு இம்மாத இறுதியில் வெளியீடு


UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM

ADDED : ஜூலை 13, 2011 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM ADDED : ஜூலை 13, 2011 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை, ஏழு லட்சத்து 16 ஆயிரத்து 543 பேர் எழுதினர். இவர்களில், ஆறு லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 950 பேர் தோல்வியடைந்தனர்.


பள்ளியில் படித்து தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் ஆகிய பிரிவினரும் சேர்த்து, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 602 பேர் தோல்வியடைந்தனர்.


இவர்களுக்கு, ஜூன் 22ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை உடனடித்தேர்வுகள் நடந்தன. விடைத்தாள்கள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இந்தப் பணிகள், 17ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன்பின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்ததும், 20ம் தேதிக்குப்பின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us