தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதிப்புவாய்ந்த பிசியோதெரபி துறை

மதிப்புவாய்ந்த பிசியோதெரபி துறை

மதிப்புவாய்ந்த பிசியோதெரபி துறை


UPDATED : ஜூலை 14, 2011 12:00 AM

ADDED : ஜூலை 14, 2011 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2011 12:00 AM ADDED : ஜூலை 14, 2011 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஒவ்வொரு 10,000 பேருக்கும் ஒரே ஒரு பிசியோதெரபிஸ்ட் மட்டுமே இருக்கிறார். காலத்திற்கேற்ப, இத்துறை நிபுணர்களின் தேவைகளும் வளர்ந்துகொண்டே வருகிறது.


மனித உடல் உறுப்புகளின் இயக்கங்களில் ஏற்படும் இடையூறுகளை போக்க இந்த அறிவியல் பயன்படுகிறது. இந்த செயல்முறையானது, மதிப்பிடுதல், டயக்னோஸ் செய்தல், நோய்களுக்கு சிகிச்சையளித்தல் போன்றவை அடங்கும்.


இத்துறை சார்ந்த படிப்புகள்


ஒரு புரொபஷனல் படிப்பாக, இந்த பிசியோதெரபி கடந்த 1960ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு வருட டிப்ளமோ படிப்பாக, பள்ளி படிப்பை முடித்தவர்கள் மேற்கொள்ளும் ஒன்றாக வழங்கப்பட்டது. இத்துறையில் நுழைய 3 வழிகள் உள்ளன.


டிப்ளமோ(டி.பி.டி), பி.எஸ்சி பட்டப்படிப்பு மற்றும் பி.பி.டி. எனப்படும் 4 வருட புரொபஷனல் படிப்பு(இதில் 6 மாதங்கள் இன்டர்ன்ஷிப் உண்டு). இந்த 4 வருட படிப்பில் சேர, பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கான சேர்க்கை, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் மூலம் நடைபெறுகிறது. இந்தப் படிப்பு பொதுவாக 4.5 ஆண்டுகள் காலஅளவு கொண்டது. எம்.பி.டி. எனப்படும் முதுநிலை பட்டம் படித்தவர்களும் இத்துறையில் நுழையலாம்.


இத்துறையில் 1 வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்களுக்கு முக்கிய மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே இதை முடித்தவர்கள் ஒரு பிசியோதெரபிஸ்டுக்கு உதவியாளராய் மட்டுமே இத்துறையில் நுழைய முடியும்.


இத்தொழிலுக்குத் தேவையான பண்புகள்


பிறப்பிலேயே இருக்கும் உடல் குறைபாடுகள், விபத்தினால் நேர்ந்த குறைகள், ஏதேனும் நோய்களாலோ அல்லது முதுமையினாலோ பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற பிசியோதெரபிஸ்ட் உதவுகிறார். இதனால், ஒரு பிசியோதெரபிஸ்டுக்கு மனித உடலியலைப் பற்றிய தெளிவான அறிவு இருக்க வேண்டும். மேலும் எலும்புகளின் சிக்கலான அமைப்புகளைப் பற்றிய விவரங்கள், தசைகள் மற்றும் நரம்புகளைப் பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். அனுதாப உணர்வும், நோயாளிகளைக் கையாள்வதில் பொறுமையும் இருப்பது இத்தொழிலுக்கு மிகவும் முக்கியம். நோயாளிகளுக்கு லாவகமாக சிகிச்சையளிக்கும் கைத்திறன், அதிக நேரம் வேலை செய்வதற்கான உடல் வலிமை போன்றவை அவசியம். நீங்கள் மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருப்பதால், உங்களின் பணியில் ஒழுங்கமைவும், தனித்துவமும் இருக்கும். மேலும் மருத்துவரின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவது முக்கியம்.


பணி வாய்ப்புகள்


மருத்துவமனையின் ஒவ்வொரு பிரிவிலும் பிசியோதெரபிஸ்ட்டின் தேவை உள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவாக இருந்தாலும் சரி, வயதானவர்களுக்கான மருத்துவப் பிரிவாக இருந்தாலும் சரி, அங்கே இத்துறை நிபுணரின் தேவை நிச்சயமாக இருக்கும். இப்படிப்பை முடித்த ஒரு தகுதியுள்ள நபர், சுயமாக தொழில் செய்து நன்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சுயமாக வாடிக்கையாளர்களை வைத்து தொழில் செய்வதால் அதிக ஓய்வு நேரம் கிடைக்கும். ஒரு நாளைக்கு இவ்வளவு நோயாளிகள் என்ற முறையில் வரைமுறையிட்டு பணி செய்யலாம். கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்களிலும், மறுவாழ்வு மையங்களிலும், விளையாட்டு கிளீனிக்குகளிலும், பிட்னெஸ் மையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், உடற்பயிற்சி கல்விப் பள்ளிகளிலும் மற்றும் இன்னபிற மையங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.


சம்பளம்


சில மருத்துவமனைகள், ஒரு நாளைக்கு ஒரு பிசியோதெரபிஸ்ட் எத்தனை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார் என்பதை வைத்து சம்பளம் தருகின்றன. இத்துறையில் ஆரம்ப சம்பளமானது இடத்திற்கு இடம் மாறுபடும். இந்தியாவில் ஆரம்ப சம்பளமானது, மாதம் ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை கிடைக்கிறது. தனியாக தொழில் செய்பவர்கள் மாதம் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை வருமானம் ஈட்டலாம். அனுபவமுள்ள பிசியோதெரபிஸ்டுகள் ஒரு நோயாளிக்கு ஒருமுறை சிகிச்சையளிக்க ரூ.250 முதல் ரூ.400 வரை கட்டணம் பெறுகின்றனர். அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாத வருமானம் ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை கிடைக்கும்(இந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவும் மிக அதிகம் என்பதை நினைவில் வைக்கவும்).


இத்தொழிலுக்கான எதிர்கால வாய்ப்புகள்


மருத்துவத்துறையில் "பிசியோதெரபி" ஒரு வளர்ந்துவரும் பிரிவாக உள்ளது. மருந்து இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவதாலும், இதுவரை எந்தப் பக்க விளைவுகளும் இல்லாததாலும் இந்த சிகிச்சையை பல நோயாளிகள் விரும்புகிறார்கள். ஒரு பிசியோதெரபிஸ்டாக இருப்பது பெருமையான விஷயமாக இருக்கும் அதே நேரத்தில், சில ஏற்ற-இறக்கங்களையும் இத்துறையில் சந்தித்தாக வேண்டும். ஏனெனில், உங்களின் சிகிச்சை முறைகள் எல்லா நேரங்களிலும் பலனளித்துவிடாது. அதேசமயத்தில் இத்துறைக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் ஆர்வம் இருப்பவர்கள் தாராளமாக இதை தேர்ந்தெடுக்கலாம்.


இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்


Government medical college - Nagpur(www.iiher.org)


KEM hospital - Mumbai(www.kem.edu)


M S Ramaiah institute of physiotherapy - Bangalore(www.msrmc.ac.in)


JSS college of physiotherapy - Mysore(www.jssedu.jssonline.org)


Garden city college of physiotherapy - Bangalore(www.gardencitycollege.edu)


Mahatma Gandhi university medical college - Kottayam(www.mgu.ac.in)


 


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us