UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM
ADDED : ஜூலை 15, 2011 10:11 AM
அ நிறம் | அளவு
"கிராமத்தில் உள்ள பெற்றோர், தங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்க வையுங்கள்" என்று டி.ஆர்.ஓ., கஜலட்சுமி அறிவுறுத்தினார்.
அவிநாசி அருகே கருக்கன்காட்டுப்புதூர் பள்ளியில், மனு நீதி நாள் முகாம் நடந்தது. 18 பயனாளிகளுக்கு ரூ.3.71 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கி, டி.ஆர்.ஓ., கஜலட்சுமி பேசியதாவது: கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களுக்கு அரசு அதிகளவில் நலத்திட்டங்களை அளிக்கிறது. அதை அனைவரும் பெற்று பயனடைய வேண்டும்.
கிராமத்தில் பெரும்பாலும் குழந்தைகளை படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. நீங்கள் அப்படியிருக்கக்கூடாது; கண்டிப்பாக குழந்தைகளை படிக்க வையுங்கள், என்றார்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பொதுமக்கள் 81 மனுக்களை அளித்தனர்.
