கால்நடை மருத்துவ படிப்பில் ஆர்வமுடன் சேரும் மாணவர்கள்
கால்நடை மருத்துவ படிப்பில் ஆர்வமுடன் சேரும் மாணவர்கள்
UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM
ADDED : ஜூலை 15, 2011 12:31 PM
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற வரும் கலந்தாய்வில், தூத்துக்குடி இளநிலை மீன்வளக் கல்லூரியில் பி.எப்.எஸ்.சி. (இளநிலை மீன்வளம்) படிப்பில் சேர 31 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
அதேப்போல செங்குன்றம் அருகே அலமாதியில் உள்ள கல்லூரியில் உணவுப் பதனீட்டுப் தொழில்நுட்பம் (பி.டெக்.-எப்.பி.டி.) படிப்பில் சேர 16 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. இந்தப் படிப்பில் இன்னும் 4 காலியிடங்கள் உள்ளன.
இதில் உள்ள இளநிலை கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் (பிடெக்-பிபிடி) படிப்பில் சேர 16 பேர் அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனர். இதிலும் 4 இடங்கள் காலியாகவே உள்ளன.
கால்நடை மருத்துவப் படிப்பில் (பி.வி.எஸ்சி. அன்ட் ஏஎச்) சேர 177 மாணவர்கள் அனுமதிக் கடிதம பெற்றுள்ளனர்.
அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள், அவரவர் சேர்க்கை பெற்ற கல்லூரியில் ஜுலை 25ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு சேராத மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தம் உள்ள காலியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவற்றுக்கு இம்மாத இறுதியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்.
