UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM
ADDED : ஜூலை 15, 2011 02:06 PM
அ நிறம் | அளவு
ஜுலை 14ம் தேதி 3260 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 590 மாணவர்கள் வரவில்லை. 2661 மாணவர்களே கலந்தாய்வில் பங்கேற்றனர். இதிலும் 9 மாணவர்கள் எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.
இதனால் கடந்த 5 நாட்களாக வராதோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது 14, 15 என ஒவ்வொரு நாளும் இருந்த வராதோர் விழுக்காடு 14ம் தேதி 18.10 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தமாக 19,803 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். 16355 பேர் சேர்க்கை பெற்றனர். அதில் 3385 பேர் வரவில்லை. இது மொத்தமாக 17.09 விழுக்காடாகும்.
பொதுவாக ஒவவொரு நாளும் சுமார் 400 முதல் 600 வரையிலான மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் தவிர்க்கின்றனர்.
