UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM
ADDED : ஜூலை 15, 2011 03:47 PM
ஜுலை 14ம் தேதி காலை 9 மணியளவில் கலந்தாய்வு துவங்கியது. 9 மணிக்கு பி.எஸ்சி முடித்தவர்களுக்கும், மதியம் 2 மணிக்கு சிறப்பு ஒதுக்கீடான மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவவீரர்களின் பிள்ளைகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. முதல் நாள் கலந்தாய்வில் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜுலை 15ம் தேதியன்று காலை 8 மணிக்கு கெமிக்கல் பிரிவிற்கும், 10 மணிக்க டெக்ஸ்டைல், லெதர், பிரிண்டிங் பிரிவுகளுக்கும், 12 மணி முதல் 6 மணி வரை சிவில் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. 16 மற்றும் 17ம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிவில் பிரிவினருக்கான கலந்தாய்வும், 17ம் தேதி மாலை 4 மணி முதல் மெக்கானிக்கல் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். அது, 18,19,20,12ம் தேதி காலை 8 மணி முதல் 6 மணி வரை தொடரும். 22ம் தேதி காலை 8 மணிக்கு மெக்கானிக்கல் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜுலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை எலக்ட்ரிக்கல் பிரிவுகளான எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் உட்பட 9 உட்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
