சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு 19ம் தேதி விண்ணப்பம்
சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு 19ம் தேதி விண்ணப்பம்
UPDATED : ஜூலை 16, 2011 12:00 AM
ADDED : ஜூலை 16, 2011 10:57 AM
விண்ணப்பங்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, இயற்கை மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி கல்லூரி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, நாகர்கோயில் ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரி, ஆகியவற்றில் விநியோகிக்கப்படும் என்று இந்திய மருத்துவத் துறை ஆணையர் தெரிவித்தார்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆகஸ்ட் 9ம் தேதி கடைசி நாளாகும்.
அரசு கல்லூரிகளில் 296 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1,030 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் அண்டுக் கட்டணமாக படிப்பிற்கு ஏற்ப ரூ.25,000 முதல் ரூ.33,000 வரை செலுத்த வேண்டியது வரும்.
விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், கட்-ஆப் மதிப்பெண்ணைக் கொண்ட தரவரிசைப் பயல் ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் வெளியிடப்படும். சென்னை அரும்பாக்கஇந்திய மருத்துவ முறை ஆணையர் அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 5ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
