UPDATED : ஜூலை 16, 2011 12:00 AM
ADDED : ஜூலை 16, 2011 05:21 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க்., படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 17ல் நடக்கிறது.
காலை 9 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வில் 280.00 முதல் 190.33 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பங்கேற்ற அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் பெறாதவர்களும், இந்த கட்-ஆப் மதிப்பெண் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தாலும் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலையில் உள்ள விவேகானந்தா கலை அரங்கிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என அண்ணா பல்கலை சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
