தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம்

பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம்

பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம்


UPDATED : ஜூலை 17, 2011 12:00 AM

ADDED : ஜூலை 17, 2011 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2011 12:00 AM ADDED : ஜூலை 17, 2011 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு சமீபத்தில் பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டது.


இதன்படி

துவக்க கல்வித்துறையில் 5 வரையுள்ள துவக்கப் பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரம், 6 முதல் 8 வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 7 ஆயிரம், 1 முதல் 8 வரையுள்ள பள்ளிகளுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையில் 6 முதல் 8 வரையுள்ள பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரம், 9, 10 வகுப்புள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 7 ஆயிரம், 6 முதல் 10 வரையுள்ள பள்ளிகளுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது.


இத்தொகையை

சமீபத்தில் மேலும் அதிகரித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சாதனங்களை மேம்படுத்தவும், ஏற்கனவே வழங்கப்பட்ட வசதிகளை பழுதுபார்ப்பதும் அவசியம். இதனடிப்படையில் 3 வகுப்பறை உள்ள பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரமும், 3 வகுப்பறைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us