தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லேப் டெக்னீசியன் துறையில் விருப்பமா?

லேப் டெக்னீசியன் துறையில் விருப்பமா?

லேப் டெக்னீசியன் துறையில் விருப்பமா?


UPDATED : ஜூலை 17, 2011 12:00 AM

ADDED : ஜூலை 17, 2011 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2011 12:00 AM ADDED : ஜூலை 17, 2011 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மருத்துவ ஆய்வகப் பணியாளர்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களால்(பேத்தாலஜிஸ்ட் - நோயியல் வல்லுநர் போன்றவர்கள்) மேற்பார்வை இடப்படுகிறார்கள். இந்த நோயியல் வல்லுநர்கள், நோய் தொடர்பான பரிசோதனையில் சிறப்பு பயிற்சி பெறுகிறார்கள் மற்றும் பலவித சிறப்புத்துறைகளில் அவர்கள் பணிபுரியும் திறனைப் பெற்றுள்ளார்கள்.


இத்துறை சார்ந்தவர்கள் தனியாகப் பணிபுரிந்தாலும், அதிகநேரங்களில், மருத்துவ சிகிச்சைக் குழுவின் ஒரு முக்கிய அங்கமாகவே இருப்பார்கள். எம்.எல்.டி. என்ற டிப்ளமோ படிப்பானது, மருத்துவமனைகள், பொது மற்றும் தனியார் கிளீனிக்குகள், ரத்தம் மற்றும் உறுப்பு வங்கிகள், வெளி நோயாளி கவனிப்பு மையங்கள் மற்றும் ஆய்வக கருவி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனங்களில் பணிபுரிய துணைபுரிகிறது.


லேப் டெக்னீசியன் துறையில் நுழைவது எப்படி

:


பி.எம்.எல்.டி. மற்றும் டி.எம்.எல்.டி. போன்ற படிப்புகள் லேப் டெக்னாலஜி துறையில் வழங்கப்படுகின்றன. பி.எம்.எல்.டி. படிப்பானது, மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணருக்கானது. ரத்தம், சிறுநீர், மலம், முதுகுதண்டு திரவம், மூட்டு திரவம் போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய பயிற்சியளிக்கிறது. இதன்மூலம் நோய் என்ன என்பதை மருத்துவர் கண்டறிந்து, சரியான சிகிச்சையளிக்க முடிகிறது. பொதுவான மற்றும் தனியான துறைகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.


இத்துறையில் மேலும் ஸ்பெஷலைசேஷன் படிப்புகளை மேற்கொள்வதானது, ஆராய்ச்சி, அறிவியல் முறையிலான குற்ற ஆய்வுத் துறை, பார்மசூடிகல் மற்றும் தொழில்துறை ஆய்வகங்களில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. எம்.எல்.டி. படிப்பை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கையில், அங்கே பணிபுரியும் ஆசிரியர்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் என்ற தகுதி பெற்றுள்ளார்களா? என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். மேலும், நேரடியான ஆய்வக பயிற்சி தரப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.


இதுதொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை அலிகார் முஸ்லிம் பல்கலை, மருத்துவ அறிவியல்களுக்கான ஆசிய கல்வி நிறுவனம், பாராமெடிக்கல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.


பணியின் தன்மைகள்


வழிகாட்டுதலின்படி, மருத்துவ டெக்னீசியன்கள், தொடர்ச்சியான ஆய்வக சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கீழ் பணிபுரிகிறார்கள். வகை மாதிரிகளை தயார்செய்து, மாதிரிகளை தானாகவே பகுப்பாய்வு செய்யும் சாதனங்களை இயக்குகிறார்கள். இத்தகைய சோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு, ஆய்வகத்தை பராமரிக்கும் பணியையும் செய்கிறார்கள். ஆய்வகத்தில் பயன்படுத்த, எப்போம் தரமான வழிமுறைகளையே கையாள்கிறார்கள். பலதரப்பட்ட ரசாயனங்களை சரியான அளவுகளில் கலப்பதும் இப்பணியில் அடங்கும்.


ஒரு நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோயைப் பற்றிய தன்மைகளை அறிய, ஒரு டெக்னீசியன் பலவித சோதனை முறைகளைக் கையாண்டு, மருத்துவர்களுக்கு உதவுகிறார்.


வேலை வாய்ப்புகள்


இத்துறையில் ஒருவரின் அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து, சம்பளம் மாறுபடுகிறது. எனவேதான், ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் படித்து, தரமான ஆய்வகப் பயிற்சி பெறுவது, இங்கே முக்கிய விஷயமாக சொல்லப்படுகிறது. முழுமையான ஆராய்ச்சி தொடர்புடைய மருத்துவ நிறுவனங்களில் பணிபுரிந்து, அங்கே புதிய சிகிச்சைகளையும், மருந்தளிப்பு முறைகளையும் கற்றுக் கொண்டிருந்தால், அவற்றை நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். பல அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், எம்.எல்.டி. டிப்ளமோ படிப்பை வழங்குகின்றன. இதன்மூலம், அரசு மருத்துவமனை மட்டுமின்றி, பல தனியார் மருத்துவமனைகள், கிளீனிக்குகள், நர்சிங் ஹோம்ஸ் மற்றும் சுகாதார மையங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.


சம்பளம்


நீங்கள் பணிக்கு சேரும் நிறுவனங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து, உங்களின் சம்பளம் வேறுபடுகிறது. நகர்ப்புறங்களில் பொதுவாக அதிக சம்பளம் கிடைக்கும். ஆரம்ப நிலையில், ரூ.8000 முதல் 12000 வரையிலும், உயர்நிலையை அடைந்ததும், ரூ.40000 முதல் 50000 வரையிலும் பெறலாம்.


எதிர்கால வாய்ப்புகள்


இத்துறையில் அனுபவம்கூட கூட, நீங்கள் நிறைய கற்றுக்கொள்கிறீர்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் மைக்ரோபயாலஜி, ஹெமடாலஜி, பயோகெமிஸ்ட்ரி மற்றும் பயோகெமிஸ்ட்ரி போன்றவற்றில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றால், வாழ்வில் அவருக்கு வளமான வாய்ப்புகள் அமையும்.


இத்துறை சார்ந்த படிப்புகளை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்


Loyola college - Chennai(www.pondiuni.edu.in)


Aligar muslim university - U.P(www.amu.ac.in)


Dr. BR Ambedkar medical college - Bangalore(www.bramc.org)


Government medical college and hospital - Nagpur(www.gmcnagpur.org.in)


Vardhman Mahavir medical college - NewDelhi(www.vmmc-sjh.nic.in)


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us