UPDATED : ஜூலை 18, 2011 12:00 AM
ADDED : ஜூலை 18, 2011 02:51 PM
அ நிறம் | அளவு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து உடனடியாக துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் படிப்பில் சேர தனிக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரும் பொறியியல் கலந்தாய்வில் தற்போது பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
ஜுலை 8ம் தேதி துவங்கி ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் நடைபெற்று வரும் கலந்தாய்வை, ஞாயிற்றுக்கிழமையன்று துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பார்வையிட்டார்.
அற்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், துணைத் தேர்வர்களுக்கு தனியாக கலந்தாய்வு நடைபெறும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
