UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM
ADDED : ஜூலை 20, 2011 04:04 PM
ஆஸ்ட்ரேலியாவில் மாணவர்களுக்கான விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸி. கல்வி முறைக்கு ஏற்ற திறன் பெற்ற மாணவர்கள் (இந்திய மாணவர்களும்) விசா பெற்று வருகின்றனர்.
மோனஷ் பல்கலையின் ஆய்வாளர் பாப் பிர்ரெல் கூறுகையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு வெறும் 4000 விசா மட்டுமே வழங்கப்பட உள்ளது. 2006-07ல், 19 ஆயிரம் விசாவும், 2007-08ல் 17 ஆயிரம் விசாவும் வழங்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் விசா வழியாக ஆஸ்ட்ரேலியாவில் கல்வி விற்பனைப் பொருளாக இருந்தது என்று ஒரு செய்தியை மேற்கோள்காட்டினார்.
ஆஸ்ட்ரேலியாவின் விசா மற்றும் குடியுரிமை துறை, இந்த ஆண்டில் மாணவர்களுக்கு 4,000 விசா வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால் ஆஸ்ட்ரேலியாவின் கல்வி உன்னதநிலை கெடாமல், அதன் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும் என்றார்.
புதிய விதிமுறையின்படி, நன்கு ஆங்கிலம் பேசக்கூடிய மாணவர்களுக்கு விசா கிடைப்பது எளிதாக உள்ளது.
ஆங்கிலத் தேர்விலும், பேச்சுத் தேர்விலும், ஆங்கில மொழி பேசும் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு எளிதாக விசா கிடைக்கிறது. இந்திய மாணவர்களும் கூட இந்த தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்று ஆஸ்ட்ரேலிய விசா பெற்றுள்ளனர்.
முன்பு இருந்த, சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும், நன்கு உடை அணியும் பழக்கம் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இந்த முறை தளர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குத் தேவையான அடிப்படையான திறன்களை மட்டுமே சோதிக்கும் வகையில் புதிய விசா நடைமுறை மாற்றப்பட்டுள்ளது திறமையான மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
