தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் தலைமுறை மருத்துவ மாணவர்களுக்கு சலுகை

முதல் தலைமுறை மருத்துவ மாணவர்களுக்கு சலுகை

முதல் தலைமுறை மருத்துவ மாணவர்களுக்கு சலுகை


UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM

ADDED : ஜூலை 21, 2011 02:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM ADDED : ஜூலை 21, 2011 02:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 

இதேப்போல, தமிழகத்தில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த 169 முதல் தலைமுறை மாணவர்களுக்கும் தலா ரூ.40,000 கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், தற்போது இரண்டாமாண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் 351 பேருக்கு, கடந்த ஆண்டு செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்க தமிழக அரசு ரூ.2,95 கோடியை ஒதுக்க முடிவெடுத்துள்ளது.

குடும்பத்தில் யாரும் பட்டதாரிகளே இல்லை என்ற நிலையில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை மாணவ, மாணவியர், சாதிமத பாகுபாடின்றி, வருமான உச்சவரம்பு ஏதும் இன்றி அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையுமே அரசு ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கடந்த கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 429 முதல் தலைமுறை மாணவ, மாணவியருக்கும், அவர்கள் கல்விக் கட்டணமாக செலுத்திய ரூ.4,000 திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் நடந்து முடிந்துள்ள முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வில், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள 420 முதல் தலைமுறை மாணவ, மாணவியருக்கும், சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ள 6  முதல்தலைமுறை மாணவர்களுக்கும், அவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம் அடுத்த கல்வி ஆண்டில் (2012-13) திரும்பக் கிடைத்துவிடும்.

இந்தக் கட்டணச் சலுகை இரண்டாவது மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெறும் மாணவர்களுக்கும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us