UPDATED : ஜூலை 22, 2011 12:00 AM
ADDED : ஜூலை 22, 2011 10:41 AM
ஒட்டுமொத்தமாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பொறியியல் கல்லூரி துவக்கப்பட்ட ஆண்டை அடிப்படையாக வைத்து என மூன்று விதமான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த தரவரிசைப் பட்டியலில் ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், ஆம்.எம்.கே. காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி 2ம் இடத்தையும், ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.
ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் 4ம் இடத்திலும், 5ம் இடத்தில் ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கும், 6ம் இடத்தில் ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியும், வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 7ம் இடத்திலும், 8ம் இடத்தில் மீனாக்ஷி சுந்தரராஜன் இன்ஜினியரிங் கல்லூரியும், 9ம் இடத்தில் வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியும், பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ் 10ம் இடத்திலும் உள்ளன.
துவக்கப்பட்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (1968) முதல் இடத்திலும், ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் (1984), ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் (1985) முறையே 2ம், 3ம் இடத்திலும் உள்ளன.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தரவரிசைப் பட்டியலை வெளியிடுமாறு உயர் நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை www.annatech.ac.in இணையதளத்தில் காணலாம்.
