UPDATED : ஜூலை 22, 2011 12:00 AM
ADDED : ஜூலை 22, 2011 11:17 AM
அ நிறம் | அளவு
ஜுலை 21ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு நிலவரப்படி, 33,900 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதுவரை அழைக்கப்பட்ட 41,608 பேரில் 7595 மாணவர்கள் வரவில்லை. 112 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டு, எந்தப் பாடபிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.
மீதமுள்ள 33,900 மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
ஜுலை 21ம் தேதி நடைபெற்ற பொதுப்பிரிவு கலந்தாய்வில், 3063 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 2447 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதற்கான ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.
தற்போது வராதோர் எண்ணிக்கை 18.25 சதவீதமாக உள்ளது.
