UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM
ADDED : ஜூலை 23, 2011 10:46 AM
திருச்சி பாரதிதாசன் பல்கலையில் துவங்கப்பட்டுள்ள எம்.எஸ்சி., புள்ளியியலில் சேருவதற்கு இளங்கலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என திருச்சி பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பாரதிதாசன் பல்கலை புள்ளியியல்துறை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. புள்ளியியல் சம்பந்தப்பட்ட திறன்களை வளர்க்கவும், வெவ்வேறு துறைகளில் அதன் பயன்பாட்டினை தெரிந்துகொள்ளவும் இத்துறையானது சிறப்பான முறையில் செயல்பட உள்ளது.
உற்பத்தி திறனாளிகளின் தரம் அறிதல், கூறு எடுத்தல், மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பரிசோதனை, உயிரியல், பரிசோதனைகள், சுற்றுச்சூழல் கல்வி, பொருளாதார ஆய்வுகள், கல்வி, சமூக அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆராயத்தக்க திறன் வாய்ந்த பட்ட மேற்படிப்பு மாணவர்களை உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும்.
இத்துறையில் புதிய 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு எம்.எஸ்சி., புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) துவங்கப்பட்டுள்ளது. இதில்- 1-+
(ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்.,) மத்திய புள்ளியியல் கூட்டமைப்பு (சி.எஸ்.ஓ.,), தேசிய மாதிரி கணக்கீட்டு நிறுவனம் (என்.எஸ்.எஸ்.ஓ.,), புள்ளியில் உதவி இயக்குனர் திட்டக்குழு, காப்பீட்டுத்துறை போன்ற துறைகளில் புள்ளியியல் துறைகளில் மற்றும் ஆய்வாளர் பணிகள்.
மாநில அரசு துறையில், புள்ளியியல் துறை துணை இயக்குனர், மாவட்ட புள்ளியியல் துறையில் அதிகாரி, உதவி ஆய்வாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் மண்டல வளர்ச்சி ஆய்வாளர் பணியிடங்கள், பொது மற்றும் தனியார் தொழிற்சாலை, வங்கித்துறை வேலைவாய்ப்புக்களில் புள்ளியியல் அதிகாரி, உதவியாளர், ஆய்வாளர், தரக்கட்டுப்பாடு அலுவலர் மற்றும் ஆய்வாளர் பணிகள், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை வேலை வாய்ப்புகளில் மத்திய, மாநில தகுதி தேர்வுகளான நெட், செட், ஸ்லெட் தேர்ச்சி பெற்ற பின்பு உதவி பேராசிரியர், விரிவுரையாளர், இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிகள் ஆகியவையும் உள்ளன.
இந்த எம்.எஸ்சி., புள்ளியியல் படிப்பில் சேர்ந்து பயில விருப்பம் உள்ளவர்கள் ஜெய்சங்கர், உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், புள்ளியியல் துறை, பாரதிதாசன் பல்கலை திருச்சி என்ற முகவரியிலும், 94444-69629 என்ற மொபைல்ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
