UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM
ADDED : ஜூலை 23, 2011 12:01 PM
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில், ஜுலை 22ம் தேதி மாலையுடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 119 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இவற்றில் ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினருக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் இடங்களில் தற்போது 2,150 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,06,877 இடங்களையும் சேர்த்து மொத்தமாக 1,09,146 இடங்கள் காலியாக உள்ளன.
ஜுலை 22ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 5,435 இடங்களும், அரசு கல்லூரிகளில் உள்ள 4,435 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரியில் உள்ள 26,422 இடங்களும் நிரம்பியுள்ளன.
ஜுலை 8ம் தேதி முதல் நடைபெற்று வரும் பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்று இதுவரை 36,292 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
