UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM
ADDED : ஜூலை 23, 2011 02:49 PM
அ நிறம் | அளவு
மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.எஸ்சி., நர்சிங், பிஸியோ தெரபி, பி.பார்ம்., ஆகிய படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் கடந்த 19ம் தேதி தொடங்கியது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் சேருவதற்கு 200 இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால், ஜுலை 22ம் தேதி முதல் கலந்தாய்விற்கு வரும் மாணவிகள் சுயநிதி நர்சிங் கல்லூரிகளில் தான் சேர்க்கை பெறுகின்றனர்.
தமிழகத்தில் 126 சுயநிதி நர்சிங் கல்லூரிகளில் மொத்தம் 4,305 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நர்சிங் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.
