தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பவர் டிரான்ஸ்மிசன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வாய்ப்பு

பவர் டிரான்ஸ்மிசன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வாய்ப்பு

பவர் டிரான்ஸ்மிசன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வாய்ப்பு


UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM

ADDED : ஜூலை 25, 2011 03:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM ADDED : ஜூலை 25, 2011 03:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பவர் டிரான்ஸ்மிசன் கார்ப்பரேஷன் ஆப் உத்தரகண்ட் லிமிடெட்., (பி.டி.சி.யூ.எல்.,) என்ற நிறுவனம் உத்தரகண்ட் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு அரசு நிறுவனமாகும். உத்தரகண்ட் மாநிலத்திற்கான குறைந்த அழுத்த மற்றும் அதிக அழுத்த மின்சார லைன்களை நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் என்ஜினியர் எலக்ட்ரிகல் பிரிவில் 29 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தேவை
பி.டி.சி.யூ.எல்., நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் எலக்ட்ரிகல் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தி மொழியறிவு கட்டாயம் தேவைப்படும்.

இதர விபரங்கள்
எழுத்துத் தேர்வு மூலமாகவே இந்த நிறுவனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/க்கான டி.டி.,யை Managing Director, Power Transmission Corporation of Uttarkhand Ltd., என்ற பெயரில் டேராடூனில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி பின்வரும் முகவரிக்கு 26.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அனுப்ப வேண்டும்.

முகவரி
Post Box No - 112,
Post Office Badarpur,
New Delhi - 110044.

இணையதள முகவரி: www.ptcul.org/ptcul_06Jun11.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us