பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் வாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் வாய்ப்பு
UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM
ADDED : ஜூலை 25, 2011 03:32 PM
இந்திய ராணுவத்தின் உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்., என்ற பி.இ.எல்., நிறுவனம் 1954ல் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் மல்டிபுராடக்ட், மல்டிடெக்னாலஜி, மல்டியூனிட் நிறுவனமாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
ரேடார்கள், மிலிடரி கம்யூனிகேஷன் எக்விப்மென்ட்ஸ், நேவல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், சவுண்டு அண்டு விஷன் பிராட்காஸ்டிங், ஆப்டோஎலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல்வேறு பணிகளில் பெல் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் அப்ரன்டிஸ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.
வேண்டியது என்னென்ன:
பெல் நிறுவனத்தின் டெக்னிகல் அப்ரண்டிஸ் பதவிக்கு விண்ணப்பிக்க 01.08.2011 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் பணி இடங்கள் எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற முதல் பிரிவிலும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன் என்ற இரண்டாவது பிரிவிலும் நிரப்பப்பட உள்ளன. தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பை 01.01.2009க்குப் பின்னர் முடித்தவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிக்கு நேர்காணல் முறையில் (வாக்-இன்) பணிக்குத் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற தகவல்கள்:
நேர்காணல் 25 மற்றும் 26 ஜூலை அன்று CLD / BEL ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக் இன்னுக்கு செல்ல விரும்புபவர்கள் ஒரிஜினல் டிப்ளமோ சான்றிதழ் அல்லது புரொவிஷனல் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். முழு தகவல்களை அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரி: http://www.bel-india.com/index.aspx?q=§ionid=144
