UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM
ADDED : ஜூலை 26, 2011 04:11 PM
செயற்கைக்கோள் வழியாக பெறப்படும் புவி சம்மந்தப்பட்ட தகவல்கள், படங்களை வைத்து புவியியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே இவர்களது பணி. டிஜிட்டல் வடிவில் மேப்களை தயாரித்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களின் தயாரிக்கப்படும் மேப்கள் கல்வி, சட்டம், அரசியல் ரீதியாக பயன் படுத்தப்படுகிறது.
மேப்கள் பல விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. புதிய இடங்களில் சென்று வழி தெரியாமல் சிக்கிக்கொள்பவர்கள் மேப்களை வைத்து தான் திசைகளை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இடங்கள், தேசிய பூங்காக்களும் தற்போது மேப்களில் குறிக்கப்படுகின்றன. நவீன மேப்கள் ஏ.டி.எம்.,கள் இருக்கும் இடங்களையும் அடையாளம் காட்டுகின்றன.
மேப்களின் துல்லியத்தை அறிய பல இடங்களுக்கு இவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இடங்களும், குறியீடுகளும் சரியாக உள்ளனவா என்பதை பல முறை சோதிக்கின்றனர். சட்ட ஆவணங்களின் உதவியோடு எல்லைகள் சரிபார்க்கின்றனர். பழைய மேப்களில் உள்ள தகவல்களை மேம்படுத்தவும் முயற்சி செய்கின்றனர்.
