UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM
ADDED : ஜூலை 29, 2011 11:46 AM
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில நாட்கள் முன்பு வரை ஒரு நாளில் இரண்டு கட்-ஆப் (உதாரணத்திற்கு 155-154) மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடைபெற்று வந்தது. ஒரு நாளில் சுமாராக 3 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்விற்கு வந்தனர்.
ஆனால் தற்போது 4 கட்-ஆப் (155-152) மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுவதால், சுமாராக 6 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜுலை 28ம் தேதியன்று மொத்தம் 5795 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். அதில் 1396 மாணவர்கள் வரவில்லை. 10 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும், பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். மீதம் 4389 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதற்கான ஆணைகளைப் பெற்றுச் சென்றனர்.
