தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் நிரம்பின

அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் நிரம்பின

அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் நிரம்பின


UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM

ADDED : ஜூலை 29, 2011 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM ADDED : ஜூலை 29, 2011 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்றுத் துவங்கியது.

முதல் நாளான நேற்று பிற்பகல் 1 மணியளவில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவான இடங்களில் மட்டும் மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர்களை சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலந்தாய்வினை நடத்துகிறது.

முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 5 இடங்கள், 11 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 778 இடங்கள், பி.டி.எஸ்., படிப்பில், அரசு பல் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 73 இடங்கள் மற்றும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 847 இடங்கள் ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வின்  முதல் நாளான நேற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக இருந்த 5 இடங்கள் மட்டும் நிரப்பப்பட்டன. மீதியுள்ள இடங்களுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கும் என, மருத்துவக் கல்லூரி கூடுதல் இயக்குனர் ஷீலா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us