தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோல்ப் மேலாண்மைக்கான முதுநிலைப் படிப்பு

கோல்ப் மேலாண்மைக்கான முதுநிலைப் படிப்பு

கோல்ப் மேலாண்மைக்கான முதுநிலைப் படிப்பு


UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM

ADDED : ஜூலை 29, 2011 11:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM ADDED : ஜூலை 29, 2011 11:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எனவே இதற்கான மனிதவளத்தை அதிகப்படுத்தும் பொருட்டு, கோல்ப் மேனேஜ்மென்டில் முதுநிலைப் பட்டப் படிப்பை தொடங்க, புனேவிலுள்ள, சர்வதேச மேலாண்மைக்கான கார்பரேட் பள்ளி(இஸ்காம்), பிரிட்டனின் எல்ம்வுட் கல்லூரியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த முழு நேரப் படிப்பானது, இது தொடர்பான துறையை நிர்வகிக்க, மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கும். செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையின் ராயல் மற்றும் தொன்மையான கோல்ப் கிளப், ஸ்காட்டிஷ் குவாலிபிகேஷன் அதாரிட்டி மற்றும் இந்தியன் கோல்ப் யூனியன் போன்றவை இந்தப் படிப்பைத் தொடங்க ஆதரவளிக்கின்றன. இதன் பாடத்திட்டமானது, கோல்ப் மேலாண்மையின் அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்காட்லாந்தில் 6 மாத வேலைப் பயிற்சியையும் கொண்டது. மொத்தம் 24 மாதங்கள் கொண்ட இந்த 2 வருட படிப்பில், 6 மாத உதவியாளர்(அப்ரன்டிஸ்ஷிப்) பயிற்சியும் அடக்கம்.

இந்தப் படிப்பில், ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கைகள் ஆகியவற்றின் துணையுடன் கூடிய 700 மணிநேர பாடம் நடத்துதல் திட்டம் மற்றும் விரிவான மதிப்பீட்டுத் திட்டம் போன்றவை அடங்கும். பொதுவாக எந்த இளநிலைப் படிப்பை முடித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம் என்றாலும், நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேசமயம், ஜிமேட், கேட், மேட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு, நுழைவுத் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், ராணுவத் துறை அதிகாரிகளுக்கும், அவர்களின் பணி நிலையை மதிப்பிட்டு, நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம், இந்த சலுகையானது முழுவதும் நிறுவனத்தின் விருப்பம் சார்ந்தது. ஒவ்வொருவரும் நேர்முகத் தேர்வில் தேற வேண்டும்.

சந்த்மால் முனாட் கல்வி அறக்கட்டளையின் நிதியுதவியைப் பெறும் இந்த கல்வி நிறுவனம், தற்போதைய மாறிய சூழலுக்கேற்பவும், வணிக நோக்கத்தின்படியும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவுள்ளது. இப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் கோல்ப் விளையாட்டின் அம்சங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால், இப்படிப்பின்போது, கோல்ப் விளையாடவும் கற்றுத் தரப்படும். எம்.பி.ஏ. பட்டதாரிகள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி பட்டதாரிகள் ஆகியோருக்கு, நேரடியாக 2ம் வருடத்தில் சேரும் வாய்ப்பு உண்டு.

இந்த 2 வருட படிப்பில் மொத்தம் 4 செமஸ்டர்கள் உண்டு. சேவைக் கட்டணத்தையும் சேர்த்து, இந்த படிப்பை முடிக்க மொத்தம் ரூ.9 லட்சம் செலவாகும். 2 தவணைகளில் இவற்றை செலுத்தலாம். அதேசமயம், நேரடியாக 2ம் வருட படிப்பில் சேர்பவர்களுக்கு ரூ.6 லட்சம் செலவாகும். இப்படிப்பிற்கு வங்கி கடன்கள் கிடைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கட்டணமானது, லேப்டாப், பயிற்சி மற்றும் கற்பித்தல் உபகரணங்கள், படிப்பு சம்பந்தமான பயணங்கள்(ஸ்காட்லாந்திற்கு சென்று திரும்புவது உட்பட), புனே கோல்ப் கோர்ஸ் கிளப்பில் 2 வருட உறுப்பினராக இருப்பது, அலுவல் ரீதியான உடை, தங்குமிடம், வேலை நாட்களுக்கு மட்டும் காலை மற்றும் மதிய உணவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

அதேசமயம், இந்த கட்டணத்துடன், கோல்ப் உபகரணம் மற்றும் தேநீர் கட்டணம், தனிப்பட்ட பயணச் செலவு, விடுமுறையின்போது வீட்டிற்கு செல்லுதல் மற்றும் பாடத்திட்டத்தோடு சம்பந்தப்படாத பிற செலவினங்கள் போன்றவை சேராது.

இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2011, ஜுலை மாதம் துவங்கியுள்ளது. அதேசமயம் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் துவங்குகிறது. இதைப்பற்றிய விரிவான தகவல்களுக்கு www.iscom.co.in என்ற இணையதளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us